லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஜெயம் ரவியை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் மோகன் ராஜா. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின், நதியா நடிப்பில் தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அப்படத்தின் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இல்லாமல் கதை தொடரும் என்றும் கூறும் மோகன் ராஜா, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை அடுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.